இயல்புக்கு மாறாக விமானம் தரையிறங்கிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்து நாட்டின் ஹீத்ரோ விமான நிலையத்தில் கடுமையாக புயல் அடித்து வருகிறது. இதையொட்டி, புயலின் தாக்கத்தை எதிர்கொள்ள முடியாமல், ஒரு விமானம் திணறியுள்ளது.
எனினும், விமான ஓட்டியின் சமார்த்தியத்தால் அந்த விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறங்கும் வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், விமான ஓட்டியின் சாதுர்யமான பணியை அனைவரும் நெகிழ்ந்து பாராட்டி வருகின்றனர்.