மிரட்டி பணம் பறிக்க வந்த திருடனை அடித்து ஓடவிட்ட முதியவரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்து நாட்டின் காட்டிஃப் நகரில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு இரவில் முதியவர் ஒருவர் பணம் எடுக்க வந்துள்ளார்.

பணம் எடுத்துவிட்டு திரும்பி அவரை முகத்தை மூடிக்கொண்டு வந்த மர்ம நபர் கழுத்தைப் பிடித்துகொண்டு பணத்தை பறிக்க முயன்றுள்ளார்.

ஆனால் இதற்கெல்லாம் அசராத முதியவர் அந்த நபரை எதிர்த்து தாக்க தொடங்கினார்.

ரியல் பாக்ஸர் போல கைகளை மடக்கிக்கொண்டு திருடனின் முகத்தில் ஒரு குத்துவிட்டார். இதனால் பயந்துபோன அந்த நபர் பின்னோக்கு நகர்ந்தார்.

ஆனாலும் விடாத முதியவர் ‘சண்டைக்கு வாடா’ என கைகளை காட்டி திருடனை அழைத்தார். இதில் மிரண்டு போன திருட வந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடினார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version