அமெ­ரிக்க மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்ற தலைமை நீதி­ப­தி­யாக அமெ­ரிக்க வாழ் தமி­ழ­ரான ஸ்ரீ சீனி­வாசன் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

அமெ­ரிக்­காவில் உயர் நீதி­மன்­றத்­துக்கு அடுத்த நிலையில் இருப்­பது கொலம்­பியா சர்­கியூட் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் ஆகும்.

இந்த நீதி­மன்­றத்தின் தலைமை நீதி­பதி பத­விக்கு அமெ­ரிக்க வாழ் தமி­ழ­ரான 52 வய­தான பத்­ம­நாபன் ஸ்ரீகாந்த் சீனி­வாசன் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

srinivasanஇவ­ரது தந்தை பத்­ம­நாபன் சீனி­வாசன், தமி­ழ­கத்தின் திரு­நெல்­வேலி அரு­கே­யுள்ள மேல் திரு­வேங்­க­ட­நா­த­பு­ரத்தை சேர்ந்­தவர் ஆவார்.

இவர் அமெ­ரிக்­காவில் கன்சாஸ் பல்­க­லைக்­க­ழ­கத்தில் கணித பேரா­சி­ரி­ய­ராக இருந்தார். தாயார் சரோஜா, அதே பல்­க­லைக்­க­ழ­கத்தில் கணினி விஞ்­ஞா­னத்­துறை பேரா­சி­ரி­யை­யாக பணி­யாற்­றினார்.

1960-களில் இவர்­களின் குடும்பம், அமெ­ரிக்­காவில் குடி­யே­றி­யது. ஸ்ரீகாந்த் சீனி­வாசன் பிறந்­தது இந்­தி­யாவின் சண்­டிகார் நகரில்.

அமெ­ரிக்­காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்து அங்கேயே சட்டப்பட்டமும் பெற்றார். தொடர்ந்து எம்.பி.ஏ. பட்டமும் பெற்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version