அமெரிக்க மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதியாக அமெரிக்க வாழ் தமிழரான ஸ்ரீ சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் உயர் நீதிமன்றத்துக்கு அடுத்த நிலையில் இருப்பது கொலம்பியா சர்கியூட் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆகும்.
இந்த நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவிக்கு அமெரிக்க வாழ் தமிழரான 52 வயதான பத்மநாபன் ஸ்ரீகாந்த் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் அமெரிக்காவில் கன்சாஸ் பல்கலைக்கழகத்தில் கணித பேராசிரியராக இருந்தார். தாயார் சரோஜா, அதே பல்கலைக்கழகத்தில் கணினி விஞ்ஞானத்துறை பேராசிரியையாக பணியாற்றினார்.
1960-களில் இவர்களின் குடும்பம், அமெரிக்காவில் குடியேறியது. ஸ்ரீகாந்த் சீனிவாசன் பிறந்தது இந்தியாவின் சண்டிகார் நகரில்.
அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்து அங்கேயே சட்டப்பட்டமும் பெற்றார். தொடர்ந்து எம்.பி.ஏ. பட்டமும் பெற்றார்.