யாழ்ப்பாணம் – கல்வியங்காடு இலங்கைநாயகி அம்மன் ஆலயத்தில் நேற்று (07) அதிகாலை திருட்டு இச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளது. இருப்பினும் இது தொடர்பாக கோப்பாய் காவல்துறையில் இன்னும் முறைப்பாடு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது.

84063067_3114798388744291_8778296898231468032_oஅதிகாலை 1.48 மணியளவில் குறித்த ஆலயத்திற்கு துவிச்சக்கர வண்டியில் வந்த இருவர் (ஒரு ஆணும், பெண்ணும்) மேற்படி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டமை அருகில் இருந்த CCTV காணொளியில் தெளிவாக தெரியவந்துள்ளது.

மேலும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் இக் கோயிலின் ரூபாய் 40000 – 50000 பெறுமதியான கோயிலின் பித்தளை பொருட்கள் களவாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இது போன்ற தொடர் கொள்ளை சம்பவங்கள் கல்வியங்காடு பகுதியில் அதிகரித்த வண்ணம் உள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version