கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக இந்தியத் தலைநகர் புதுடில்லியில் மாட்டின் சிறுநீர் (கோமியம்) அருந்தும் ‘விருந்து’  நிகழ்வு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

அகில இந்திய இந்து மகாசபா (அகில் பாரத் இந்து மகாசபா) எனும் அமைப்பினால் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

இவ்வமைப்பின் தலைவர் சக்ரபாணி மஹராஜ் உட்பட  சுமார் 200 பேர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இந் நிகழ்வில் மாட்டின் சிறுநீர் கலந்த பானமொன்று  பரிமாறப்பட்டது.

மாட்டின் சிறுநீரை அருந்துவது கொரோனாவை தடுக்கும் என இவர்கள் நம்புகின்றனர். “நாம் 21 வருடங்களாக மாட்டின் சிறுநீர் அருந்துகிறோம். மாட்டின் சாணத்தினால் குளிக்கிறோம்” என இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஓம் பிரகாஷ் என்பவர் தெரிவித்துள்ளார்.

  2020-03-14T085418Z_43502270_RC2KJF91AMGW_RTRMADP_3_HEALTHCORONAVIRUS-INDIA-COW-URINE-PARTY

Share.
Leave A Reply

Exit mobile version