கனடாவின் Scarborough பகுதியில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட 38 வயது பெண்ணை டொராண்டோ பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
மார்ச் 13 ஆம் திகதி ஷெப்பர்ட் அவென்யூ கிழக்கின் தெற்கே உள்ள பிரிம்லி மற்றும் பிட்ஃபீல்ட் சாலைகளின் பகுதியில் பிரச்னை ஏற்பட்டிருப்பதாக, காலை 10 மணிக்கு முன்னதாக அவசர குழுவினர் வரவழைக்கப்பட்டனர்.
சம்பவம் அறிந்து விரைந்து வந்த பொலிஸார், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இரண்டு பெண்கள் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து கூறியுள்ள பொலிஸார், டொராண்டோ பகுதியில் வசித்து வரும் இலங்கை தமிழ் பெண்ணான தீபா சீவரத்னம் (38) என்பவரின் மார்பில் தோட்டா பாய்ந்ததால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
அதேசமயம் சிகிச்சை பெற்று வரும் மற்றொரு பெண் பற்றிய தகவல் எதுவும் வெளியிடவில்லை.
சந்தேக நபர் 5.8 முதல் 6 அடி வரை கருப்பு நிறத்தில் நடுத்தர உடல்வாகுடன் இருப்பார் என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
மேலும், தகவல் உள்ள எவரும் பொலிஸ் அல்லது க்ரைம் தடுப்பு அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.