வீட்டுக் கிணற்றில் தண்ணி அள்ளும் போது கயிறு காலில் தடுக்கியதில் கிணற்றுக்குள் வீழ்ந்த யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் செம்மணி வீதி நல்லூரடியை சேர்ந்த மதுரகுமார் கஸ்தூரி (25) என்ற இளம் யுவதியே உயிரிழந்துள்ளார்.

நல்லூரடியில் உள்ள தனது வீட்டில்  உள்ள கிணற்றில்  குறித்த யுவதி நேற்று (17) மாலை  தண்ணீர் அள்ளியுள்ளார். இதன்போது காப்பியின் கயிறு காலில் தடுக்கியதில் தண்ணி வாளியுடன் அவர்  இழுபட்டு கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளார்.

1-15இதனையடுத்து யுவதியின் அவலக் குரலைக்  கேட்ட அயலவர்கள், கிணற்றுக்குள் இருந்து யுவதியை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

எனினும் யுவதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.”

Share.
Leave A Reply

Exit mobile version