வெளிநாடுகளிலிருந்து வட மாகாணத்துக்கு வந்த வெளிநாட்டவர்களின் விபரங்கள் கொழும்பிலிருந்து பொலிஸாருக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அவர்களை கண்காணித்து, மருத்துவ பரிசோதனை செய்யாதவர்களை பரிசோதனை செய்ய அனுப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வடக்கு மாகாண பிராந்திய பொலிஸ் அதிகாரிக்கு வடக்கில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களின் விபரங்கள் கொழும்பிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதில் எந்த நாட்டில் இருந்து வந்தவர்கள் எப்போது வந்தார்கள் தொடர்பான விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
குறித்த விபரங்களின் அடிப்படையில் பொலிஸார் சுகாதாரப் பரிசோதகர்களின் உதவியுடன் வடக்கில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களை விசாரித்து வருகின்றனர்.
இதில் கடந்த இரு வாரங்களில் வந்தவர்கள் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தனரா என்பது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. அவ்வாறு பரிசோதனை செய்யாதவர்களை வவுனியாவில் உள்ள முகாமுக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.” data-id=”sfsi” />