இத்தாலியில் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை கையாள முடியாதநிலை தோன்றியுள்ளதை தொடர்ந்து அரசாங்கம் இராணுவத்தின் உதவியை நாடியுள்ளது.

நீண்ட வரிசையில் இராணுவவாகனங்களில் உடல்கள் ஏற்றப்பட்டு மயானங்களிற்கு கொண்டு செல்லப்படுவதை காண்பிக்கும் காட்சிகள் இத்தாலியின் பெர்காமோ நகரிலிருந்து வெளியாகியுள்ளன.

italy_army_truck15 வாகனங்களையும் 50 படையினரையும் பயன்படுத்தி உடல்களை அப்புறப்படுத்தி வருவதாக இத்தாலியின் இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இறந்தவர்களின் உடல்களை இராணுவவாகனங்கள் கொண்டு செல்லும் காட்சிகள் இத்தாலி சந்தித்துள்ள இழப்பை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளன

நீண்ட வரிசையில் இராணுவவாகனங்கள் உடல்களுடன் செல்வதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன

Share.
Leave A Reply

Exit mobile version