இத்தாலியில் வைரஸ் காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பெர்காமோவில் உள்ள மருத்துவமiயொன்றில் மருத்துவர்களும் தாதிமார்களும் நோயாளிகளிற்கு சிகிச்சை அளிப்பதற்கு கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதை காண்பிக்கும் வீடியோக்கள் படங்கள் வெளியாகியுள்ளன.

பப்பா கியோவனி மருத்துவமனையிலிருந்து எடுக்கப்பட்ட படங்களை ஸ்கை நியுஸ் வெளியிட்டுள்ளது.அவசர நோயாளர் பிரிவொன்று ஐசியூவாக மாற்றப்பட்டுள்ளதை அந்த வீடியோ காண்பித்துள்ளது.

மருத்துவமனையின் ஒரு ஐசியூவில் இடம்பற்றாக்குறை நிலவுவதன் காரணமாக இரண்டாவது ஐசியூ தேவைப்பட்டுள்ளது.

மிக அதிகளவில் நோயாளர்கள் காணப்படுவதை அந்த வீடியோ காண்பித்துள்ளது.

italy_patientsஇது மிகவும் கடுமையான நிமோனியா ஆகவே இது ஒவ்வொரு சுகாதார அமைப்பின் மீதும் கடும் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது என மருத்துவமனையின் அவசர பிரிவின் தலைவரான மருத்துவர் ரொபேர்ட்டோ கொசென்டனி தெரிவித்துள்ளார்.

எங்கள் பிரிவிற்கு நாளாந்தம் 50முதல் 60 நோயாளிகள் வருகின்றனர்,அவர்கள் கடுமையான பாதிப்புகளுடன் வருகின்றனர் அவர்களிற்கு பெருமளவு ஒக்சிசன் தேவைப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக நாங்கள் எங்கள் மருத்துமவமனையின் கட்டமைப்பை மாற்றியமைத்தோம் மூன்று அடுக்கு ஐசியுவை ஏற்படுத்தினோம் என அவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவபணியாளர்கள் எங்களை விலகுமாறு சைகை காண்பித்து விட்டு நோயாளிகளை சுவாசக்கருவிகள் பொருத்தப்பட்ட நிலையில்  தள்ளிக்கொண்டு செல்கின்றனர் என அந்த மருத்துவமனையின் நிலையை பதிவு செய்துள்ள ஸ்கைநியுசின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கடுமையான வேதனையில் காணப்படும் நோயாளிகளினால் நிரம்பியிருக்கும் கட்டில்கள் காணப்படும் வோர்ட்களில் இருந்து அவர்கள் வேகமாக சென்று கொண்டிருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இது வோர்ட் இல்லை ,இது வழமையாக நோயாளர்கள் காத்திருப்பதற்காக பயன்படுத்தப்படும் அறை எங்களிடம் உள்ள ஒவ்வொரு பகுதியையும் பயன்படுத்தவேண்டியுள்ளது என மருத்துவமனையின் ஊடக அதிகாரி தெரிவித்துள்ளார்.

மருத்துவ குழுவினர்  இங்கு ஒரு யுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் அவர்கள் தோல்வியடைந்து வருகின்றனர் என செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மரணிக்கும்நோயாளிகளின் அளவு இத்தாலியின் ஒவ்வொரு மருத்துவமனையிலும் அதிகரித்து வருகின்றது,விரைவில் இத்தாலி முழுவதும் இந்த நிலை உருவாகலா ம் என அவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவ பணியாளர்கள் நோயாளிகளின் நிலைமை மோசமடைவதை தவிர்ப்பதற்காக கடுமையாக போராடுகின்றனர்,அவர்கள் இறப்பதை தடுக்க முயல்கின்றனர் என செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் குழுவாக சேர்ந்து நோயாளியை உன்னிப்பாக அவதானிக்கின்றனர் அவர்கள் இல்லாவிட்டால் நோயாளி விரைவில் இறந்துவிடுவார் என அவர் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version