கொரோனா வைரஸ் மனித உடலில் நுழைந்து அறிகுறிகளை காண்பிக்க 14 நாட்கள் வரை ஆகலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதேவேளை, வயிற்றுப்போக்கு, வயிற்றுளைவு, வாந்தி மற்றும் பசியின்மை போன்றவை கொரோனா வைரஸின் முதன்மை அறிகுறிகளாகும் என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.

கொரோனா வைரஸ் முதன்முதலில் அறிவிக்கப்பட்ட சீனாவின் வுஹானில் 204 நோயாளிகளில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், மேற்கூறிய அறிகுறிகளில் 99 பேரிடம் (48.5%) இருப்பதைக் காட்டியது. ஆராய்ச்சியாளர்கள் 55 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட லயதுடைய 107 ஆண்கள் மற்றும் 94 பெண்களைப் பயன்படுத்தினர்.

அந்த நோயாளிகளில் 83 சதவீதம் பேர் முதன்மை அறிகுறியாக பசியின்மையை குறிப்பிட்டுள்ளனர். 27 சதவீதம் பேர் வயிற்றுப்போக்கை குறிப்பிட்டுள்ளனர்.

இந்த ஆராய்ச்சிக்குட்பட்ட நபர்கள் ஜனவரியில் அறிகுறியை உணர்ந்ததாகவும் பெப்ரவரி 18 முதல் 28 வரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.

“105 நோயாளிகளில், 85 பேர் முதலில் சுவாசிப்பதில் சிரமம் இருப்பதாக தெரிவித்தனர். மற்ற 20 நோயாளிகளுக்கு இந்த அறிகுறிகள் காட்டவில்லை. நோயின் தீவிரத்தன்மையுடன் செரிமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன” என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். .

உணவு செரிமானம், வயிற்றுப்போக்கை முதன்மை அறிகுறிகளைக் கொண்ட மூன்றில் ஒரு பங்கு (34.3%) நோயாளிகள் மார்ச் 5 ஆம் திகதிக்குள் குணமடைந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

d42237c19d4e0fd3258dabc8d3364b90_XLசெரிமான பிரச்சினைகளை முதன்மை அறிகுறிகளாக கொண்ட கொரோனா வைரஸ் நோயாளிகளில் பெரும்பாலோர், சுவாசக் கோளாறுகளை முதன்மை அறிகுறிகளாகக் கொண்ட கொரோனா நோயாளிகளைவிட விரைவாக குணமடைந்துள்ளனர்.

சீன ஆராய்ச்சியாளர்களால் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, அமெரிக்கன் ஜேர்னல் ஒஃப் காஸ்ட்ரோஎன்டாலஜியில் வெளியிடப்பட்டுள்ளது. இது கொரோனா வைரஸின் முதன்மை அறிகுறிகளாக வயிற்றுப்போக்கு, வயிற்றுளைவு, வாந்தி மற்றும் பசியின்மைiய வெளிப்படுத்துவதாக அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸைக் கண்டறிவதற்கு இந்த ஆய்வு பயனுள்ளதாக இருக்கும் என்று கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வைத்தியர் ப்ரென்னன் ஸ்பீகல் கூறினார்.

“இது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவலாம். இந்த அறிகுறியின் அடிப்படையில் அவர்களை ஆரம்பத்திலேயே தனிமைப்படுத்துவதன் மூலம் நோய் பரவலை கட்டுப்படுத்தலாம்” என்று அவர் மேலும் கூறினார்.


Share.
Leave A Reply

Exit mobile version