கொரோனா வைரஸ் தாக்கத்தின் அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையை கருத்தில் கொண்டு வறிய மக்களின் நலன்களை முன்னிறுத்தியதாக சமுர்த்திப் பயனாளிகளுக்கு முற்பணமாக 10 ஆயிரம் ரூபா நிதியை வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து செல்வதை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருப்பதால் நாளாந்தம் வருமானம் பெற்று தமது குடும்ப வாழ்க்கையை முன்னெடுத்து வந்த பல குடும்பங்கள் பல அசௌகரியங்களை எதிர்கொண்டுவருவதை அவதானிக்க முடிகின்றது.
அத்துடன் குறித்த கொடுப்பனவை கொரோனா வைரஸின் தாக்கம் முழுமையாக அகன்ற பின்னர் அதை அவர்களிடமிருந்து மீளப் பெறுவதா? அல்லது நிவாரணமாக வழங்குவதா என்பது தொடர்பில் துறைசார் தரப்பினருடன் ஆராய்ந்து அது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.