ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலத்தில் பொதுமக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் சமூகப் பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ள பொலிஸ் தலைமையகம், இவ்வாறு மக்கள் எதிர்நோக்கிவரும் அன்றாடப் பிரச்சினைகள் தொடர்பில் அறிவிக்குமாறும் கேட்டுள்ளது.
இதற்கமைய குறித்த பிரச்சினைகள் தொடர்பில் தெரிவிப்பதற்காக தொலைபேசி இலக்கங்களையும் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள தலைமையகம் மேலும் கூறியுள்ளதாவது,
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தமது வீட்டுகளில் இருப்பதுடன். இவ்வாரான காலப்பகுதியில் மக்கள் அவர்களது அன்றாட செயற்பாடுகளின் போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளது.
இந்நிலையில் வீட்டிலுள்ள எவரேனும் சுகயீனமடைந்தால் அது தொடர்பில் தெரியப்படுத்துவதுடன், மின்துண்டிப்பு , நீர்வெட்டு, மற்றும் ஒளடததேவைகள் தொடர்பிலும் கீழே உள்ள இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய 119 அல்லது 011-2444480, 011-2444481 என்ற இலக்கத்தில் தொடர்பை மேற்கொண்டு அறிவிக்க முடியும் என்றும் மேலும் தெரிவித்துள்ளது.