வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கோரினால் அவர்கள் நாடு திரும்புவதற்காக விசேட விமானங்களை அனுமதிப்பதற்கு இலங்கை அரசாங்கம் தயாராக உள்ளதாகவும் அவ்வமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு மற்றும் சம்பந்தப்பட்ட நாடகளின் தூதரகங்கள், உயர் ஸ்தானிகராலங்களுடன் குடிவரவு, சுற்றுலாத்துறை அதிகாரிகள் இணைந்து செயற்படுகின்றனர் என அறிவிக்ப்பட்டுள்ளது.
File Photo: AFPமார்ச் 25 ஆம் திகதி சுமார் 18, 093 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கையில் இருந்தனர் என குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமான நிலையம் செல்லும் பயணிகளும் சாரதிகளும் விமான சீட்டுகளை ஊரடங்கு நேரத்தில் வீதியில் பயணம் செய்வதற்கு பயன்படுத்த முடியும் எனவும் விமான நிலையத்தை அடைய முடியாதுள்ள வெளிநாட்டுப் பயணிகள் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுடன் அல்லது 1912 எனும் துரித தொலைபேசி இலக்கத்தின் மூலம் இலங்கை சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்துடன் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.”