அமெரிக்காவின மிசூரியில் கொரோன வைரஸ் நோயாளிகள் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனையை குண்டுவைத்து தகர்ப்பதற்கு திட்டமிட்ட நபர் ஒருவர் எவ்பிஐயுடனான துப்பாக்கி மோதலின் போது சுட்டுக்கொல்லப்பட்டு;ள்ளார்.
உள்ளுர் பயங்கரவாதம் தொடர்பான விசாரணைகளிற்காக குறிப்பிட்ட நபரை பெல்டென் நகரில் அதிகாரிகள் கைதுசெய்ய முயன்றவேளை இடம்பெற்ற துப்பாக்கி மோதலில் அந்த நபர் கொல்லப்பட்டுள்ளார்.
திமோதி ஆர் வில்சன் என்ற சந்தேகநபர் பல மாதங்களாக கண்காணிப்பின் காணப்பட்டார் என தெரிவித்துள்ள அதிகாரிகள் அவர் கறுப்பின மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலை மசூதி போன்றவற்றை தாக்க திட்டமிட்டிருந்தார் என தெரிவித்துள்ளனர்.