இன்று புதிதாக 159 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மலேசியாவில் பாதிக்கப்பட்டோரின் மொத்தத எண்ணிக்கை 2,320ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது.

அதேவேளையயில், கொரோனா வைரஸ் தொற்றுக்காக சிகிச்சை பெற்று முழுமையாகக் குணமடைந்த 61 பேர் இன்று வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் முழுமையாகக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 320 ஆக உள்ளது.

மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு ஸ்ரீபெட்டாலிங் என்ற பகுதியில் நடைபெற்ற சமய நிகழ்வு ஒன்று முக்கிய காரணமாக அமைந்துவிட்டது என்று மலேசிய ஊடகங்கள் தெரிவித்துள்ள நிலையில் அந்நிகழ்வில் பங்கேற்ற 16,500 பேரில் சுமார் 12 ஆயிரம் பேருக்கு உரிய பரிசோதனைகள் நடத்தப்பட்டு விட்டதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது. மீதமுள்ளவர்களும் தாமே முன்வந்து பரிசோதனைகளைச் செய்துகொள்ளுமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோர் குறைந்தபட்சம் 14 நாட்களுக்குத் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம் என சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் இஷான் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து வருவர்கள் மூலம் நாட்டில் கணிசமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறளது என்பதால் இவ்விஷயத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று அவர் தெரிவித்தார்.

கிருமித் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக மலேசிய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை அனைவரும் பின்பற்ற வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

_111459533_be9bd68e-bd5a-44cb-8364-1a6719e084d4புதிய மருந்தை சோதனை செய்ய மலேசியாவை தேர்வு செய்த WHO

கோவிட் 19 கிருமித் தொற்று இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு என கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய மருந்தை சோதனை முறையில் பயன்படுத்த உலக சுகாதார நிறுவனம் மலேசியாவைத் தேர்ந்தெடுத்துள்ளது.

இத்தகவலை மலேசிய பாதுகாப்பு மன்றம் தெரிவித்துள்ளது. மலேசிய சுகாதார அமைச்சுக்கு இந்த ஆய்வை மேற்கொள்ளக்கூடிய திறன் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் நம்புவதால் மலேசியா அதற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று அம்மன்றம் கூறியுள்ளது.
படத்தின் காப்புரிமை Getty Images

கோவிட் 19 நோய்த்தொற்று இருக்கும் நோயாளிகளுக்கு இம்மருந்தைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படும் என்றும், அதன்மூலம் அம்மருந்தின் பக்க விளைவுகள் மற்றும் செயல்திறன் கண்காணிக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் இப்புதிய மருந்தைக் கொண்டு சோதனை அடிப்படையில் பல நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இதன்மூலம் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிரான சிறந்த மருந்தைக் கண்டறிவதில் உலக சுகாதார நிறுவனம் முனைப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version