“இலங்கைக்கு வந்தபின் தமிழகம் திரும்பிச் சென்ற  மதுரை நபர் ஒருவர்,  கொரோனா பரவலைத் தடுப்பதற்காக  தனிமைப்படுத்தப்பட்ட வீட்டிலிருந்து நிர்வாணமாக வீதியில் ஓடிச் சென்று, வயோதிபப் பெண்ணொருவரை கடித்துக் கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

மேற்படி சந்தேக நபர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த  35 வயதான மணிகண்டன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 நேற்றுமுன்தினம் 80 வயதான பெண்ணொருவரை சந்தேக நபர் கடித்தார் எனவும், அப்பெண் நேற்று உயிரிழந்துள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மணிகண்டன் 2010 ஆம் ஆண்டு; மதுரையில்   உளவியல் நோய்க்காக சிகிச்சை பெற்றவர் என பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அப்பொலிஸ் அதிகாரி மேலும் கூறுகையில்,

இவர் அண்மையில் இலங்கைக்குச் சென்று மீண்டும் தமிழகத்துக்குத் திரும்பியிருந்தார். கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக இவர் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

indexஇந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மணிகண்டன் தனது வீட்டில் ஆடைகளை களைந்துவிட்டு, வீதியில் ஓடிச் சென்று மற்றொரு வீட்டிலிருந்து 80 வயதான பெண் ஒருவரை கடித்தார்.

காயமடைந்த அப்பெண் வெள்ளிக்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அப்பெண் இன்று காலை உயிரிழந்துள்ளார்  என்றார்.

இலங்கையில் தனது வர்த்தகத்தில் ஏற்பட்ட இழப்புகள் தொடர்பில் இலங்கையிலிருந்து திரும்பி வந்ததிலிரு;நது மணிகண்டன் மன உளைச்சல் அடைந்திருந்தார் என அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர் என மேற்படி பொலிஸ் அதிகாரி கூறியுள்ளார்.

மணிகண்டன் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவருக்கு எதிராக கொலைக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version