சிட்னியின் துறைமுக பகுதியில் ஐந்து பேர் கொண்ட திருமண நிகழ்வை தான் பார்த்ததாக பிபிசி செய்தியாளர் சய்மா கலீல் பதிவு செய்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை நான் சிட்னி துறைமுகப்பகுதியில் ஐந்து பேர் மாத்திரம் காணப்பட்ட திருமணநிகழ்வை பார்த்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பீடமொன்றில் காணப்பட்ட மணமகள் சிறிய இடைவெளியில் நடந்து வரும் மணமகளை பார்த்துக்கொண்டிருந்தார் என  பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

முகக் கவசம் அணிந்த புகைப்படப்பிடிப்பாளர் சற்று தள்ளி நின்றார், மணமக்களிற்கு அருகில் இரு முதியர்வர்கள் அமர்ந்திருந்தனர்,இரண்டு முதிய பெண்கள் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தனர் என பிபிசி செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

bm b ,n.திருமண நிகழ்வு கொண்டாட்டங்களிற்கு உதவும் ஒருவரும் காணப்பட்டார்

அப்பகுதியால் சென்று கொண்டிருந்தவர்களிற்கு அங்கு நடப்பது குறித்து ஆர்வம் அதிகரிக்க தொடங்கியதும் அவர்கள் தொலைவில் நின்று வேடிக்கை பார்த்தனர், சிலர் மணமக்களிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ஐந்து பேர்தான் இருக்கின்றீர்களா ஒரு பெண்மணி கேள்வி எழுப்பினார் எனவும் பிபிசி செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்

இது சிறிய திருமணம் என்ற போதிலும் அவர்களுடைய பெரிய நாள் என பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்

அவுஸ்திரேலிய அரசாங்கம் திருமண நிகழ்வுகளில் ஐந்து பேர் மாத்திரம் கலந்துகொள்ள முடியும் என உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Share.
Leave A Reply

Exit mobile version