கொரோனா வைரஸ் நோயால் நேற்று மாலை உயிரிழந்தவர், யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த, சென்ற இடங்கள் முற்றுகையிடும் நடவடிக்கை தற்போது தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக யாழ்.நகரை அண்மித்த ஐந்து சந்திப் பகுதியே இவ்வாறு சுகாதார துறையினர், பொலிஸ் மற்றும் இராணுவத்தால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் நோயால் நேற்று மாலை உயிரிழந்தவர் கடந்த 11 ஆம் திகதி யாழ்ப்பாணம் ஐந்து சந்தியில் நடந்த திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்டுள்ளார்.
இதற்காக கடந்த 7 ஆம் திகதி தொடக்கம் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த நிலையில், மீண்டும் நீர்கொழும்பு சென்றுள்ளார்.
நீர்கொழும்பு சென்ற அவர் கடந்த 16 ஆம் திகதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.
பின்னர் நோய் தீவிரமடைந்த நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கியிருந்து தேசிய தொற்று நோயியல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடந்த 7 ஆம் திகதி தொடக்கம் 9 ஆம் திகதி வரையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்பதற்குச் சென்றுள்ளார்.
இதன்படி யாழ்.மாவட்டத்திலும் தீவிர விசாரணைகள் நடத்தப்பட்டிருப்பதுடன், யாழ்ப்பாணத்தில் அவர் தங்கியிருந்த இடம், சந்தித்த நபர்கள், திருமண வீட்டில் கலந்து கொண்டவர்கள் என சுமார் 120 பேருடைய பெயர் பட்டியல் முதல் கட்டமாக தயாரிக்கப்பட்டு அவர்களை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.