இத்தாலியில் கொரோனா தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 837 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 202 நாடுகளுக்கு பரவியுள்ளது.
தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
உலகம் முழுவதும் இதுவரை 8 லட்சத்து 39 ஆயிரத்து 544 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 41 ஆயிரத்து 328 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இத்தாலியில் நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனாவுக்கு 837 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 428 ஆக அதிகரித்துள்ளது.