ஸ்பெய்னில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையானது புதன்கிழமை 100,000 யும் கடந்துள்ளதாக அந் நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

செவ்வாயன்று 94,417 கொரோனா தொற்றாளர்கள் ஸ்பெய்னில் பதிவாகியிருந்தனர். இந் நிலையில் இன்று புதன்கிழமை அந்த எண்ணிக்கையானது 102,136 ஆக உயர்வடைந்துள்ளது.

EUg7-DdXQAACQrqஇதேவேளை கொரோனா தொற்றினால் ஸ்பெய்னில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 8,189 காணப்பட்டது.

எனினும் அது புதன்கிழமையான இன்றைய தினம் 9,053 ஆக அதிகரித்துள்ளதாகவும் ஸ்பெய்ன் சுகாதார அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

Share.
Leave A Reply

Exit mobile version