லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிந்துலை அகரகந்த பகுதியில் தெருவோரத்தில் வீசப்பட்டிருந்த நிலையில் சிசுவின் சடலம் ஒன்று நேற்றைய (04) தினம் மாலை  கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 

தலவாக்கலை டயகம பிரதான வீதியில் அகரகந்த தோட்ட பகுதியில் பிரதான வீதிக்கு அருகாமையிலேயே இவ்வாறு சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சடலம் முழுமையாக சிதைவடைந்திருந்ததால் குழந்தை உடலின் ஒரு பாகமே கண்டறியப்பட்டுள்ளது.

குறைமாதத்தில் பிரசவிக்கப்பட்ட குழந்தையொன்றே இவ்வாறு கைவிடப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

சிசுவின் சடலம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள், நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதிபதியால் இன்று (05.04.2020) முன்னெடுக்கப்பட்டது.

சிசுவின் சடலம் குறித்து நீதவானின் ஸ்தல விசாரணைகளின் பின்னர் – மேலதிக விசாரணைக்காகவும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்காகவும் பொலிஸார் ஊடாக சடலம்  நுவரெலியா வைத்தியசாலையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version