பிரான்சில்  24 மணித்தியாலத்தில் கொரோனா வைரசினால் 1417 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன் காரணமாக வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10328 ஆக அதிகரித்துள்ளது.

பிரான்சின் பொது சுகாதார அதிகார சபையின் தலைவர் ஜெரோம் சலோமன் இதனை தெரிவித்துள்ளார்.

இன்று உயிரிழப்புகள் 16 வீதத்தினால் அதிகரித்துள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

திங்கட்கிழமை பிரான்சில் 883 பேர் உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்தாலி ஸ்பெயின் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரான்சிலேயே அதிகளவானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

பிரான்சின் பல பகுதிகள் தொடர்ந்தும் முடக்கல் நிலையில் காணப்படுகின்றன.

Share.
Leave A Reply

Exit mobile version