கொரோனா முடக்கம் காரணமாக இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டிருந்த முடக்க நிலை இன்றோடு முடிவுக்கு வருவதாக இருந்ததால், இன்று தங்கள் ஊருக்குத் திரும்பிப் போக ரயில் வரும் என்று நினைத்து, ஆயிரக் கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் மும்பை பாந்த்ரா ரயில் நிலையம் எதிரே குவிந்தனர்.

கொரோனா வைரஸ் பரவும் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, ஊரடங்கை மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

ஏற்கெனவே, இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் தொற்று ஏற்பட்டுள்ள மகாராஷ்டிரத்தில் இந்தக் கூட்டம் பதற்றத்தை ஏற்படுத்தியது.

போலீஸ் அதிகாரிகளும், உள்ளூர் தலைவர்களும் தலையிட்டு அவர்களைக் கலைந்து போகச் செய்தனர்.

உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இல்லை எனக் கூறி மும்பை பாந்த்ராவில் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,000ஐ கடந்துள்ளது. மகாராஷ்டிராவில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு இருப்பதால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் ஊரடங்கால் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இல்லை எனக் கூறி மும்பை பாந்த்ராவில் ஏராளமான தொழிலாளர்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக தங்களை வீடுகளுக்கு திருப்பி அனுப்பக் கோரி முழுக்கமிட்டு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version