கொரோனாவை குணப்படுத்துவதற்கு பிளாஸ்மா தெரபி என்ற சிகிச்சை பலனளிப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

உலகம் முழுவதும் 2 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு பிளாஸ்மா தெரபி convalescent plasma therapy என்ற சிகிச்சை பலன் அளிக்கக் கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் ஆய்வு மூலம் தெரிவித்திருக்கிறார்கள்.

கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த நோயாளிகளின் குருதியில் இருந்து பிளாஸ்மாவை பிரித்தெடுத்து, நோயாளிக்கு வழங்கும் சிகிச்சை இது.

இத்தகைய சிகிச்சை ஏற்கனவே சார்ஸ், மெர்ஸ் , பன்றிக் காய்ச்சல் போன்ற நோய்த் தொற்றுகள் பரவியபோது மேற்கொள்ளப்பட்டு, பலன் அளித்த சிகிச்சை இது.

இத்தகைய சிகிச்சையை தற்போது சீனா, தென்கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு, பலரும் குணமாகி உள்ளனர்.

இருப்பினும் இதனை உலக சுகாதார நிறுவனம் அதிகார பூர்வமாகவும், ஆதாரபூர்வமாகவும் பரிந்துரைக்கவில்லை. ஏனெனில் இது தொடர்பான பல்வேறு ஆய்வு முடிவுகள் நிலுவையில் இருக்கின்றன.

இத்தகைய தொற்று பாதிப்புக்கு தற்போது ஹைட்ராக்ஸி குளோரோக்குவின் மற்றும் அசித்ரோமைசின் போன்ற மருந்துகள் தடுப்பு மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version