கொரோனா தொற்றின் ஆரம்பகட்டத்தில் உதவி செய்யாமல் போனதற்கு ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் இத்தாலியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

“ஆம். யாருமே இதற்கு தயாராக இருக்கவில்லை. ஆரம்பகட்டத்தில் இத்தாலி கொரோனா தொற்றின் பிடியில் இருந்தபோது பலரும் அந்நாட்டுடன் துணை நிற்கவில்லை என்பதும் உண்மை. அதற்காக இத்தாலியிடம் ஐரோப்பா மன்னிப்பு கேட்கிறது” என்று ஐரோப்பிய பாராளுமன்றத்தில் அர்சலா வான் டெர் கூறினார்.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் படி, இத்தாலியில் 21,000 மேற்பட்டோர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

ஐரோப்பாவில் இத்தொற்றால் அதிகம் பேர் உயிரிழந்தது இத்தாலியில்தான்.

Share.
Leave A Reply

Exit mobile version