அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகின்ற நிலையில், உலகளவிலும் இதன் பாதிப்பு அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் நேற்று மாத்திரம் ஒரேநாளில் 2,535 பேர் உயிரிழந்துள்ளதுடன் அங்கு, பலி எண்ணிக்கை 37,154 ஆக உயர்ந்துள்ளது.

 

அந்தவகையில், அமெரிக்காவில் 709, 735 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஒரே நாளில் 32,165 பேருக்கு மேற்பட்டோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

மேலும், உலக அளவில் 2,229,701 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், உலக அளவில் 1,54,145 பேர் இந்த வைரஸால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், 5,71,573 பேர் பூரண குணமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அத்தோடு, ஸ்பெயினில், 1,90,000 பேரும், இத்தாலியில் 1,72,000 பேரும், பிரான்சில் 1,47,000பேரும், ஜெர்மனியில் 1,41,000 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version