உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 64 ஆயிரத்தை கடந்துள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்பை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அந்த முயற்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 64 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 23 லட்சத்து 92 ஆயிரத்து 166 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 16 லட்சத்து 13 ஆயிரத்து 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 54 ஆயிரத்து 239 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

மேலும், கொரோனா பரவியவர்களில் இதுவரை 6 லட்சத்து 14 ஆயிரத்து 756 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும் இந்த கொடிய வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 391 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளின் விவரங்கள் பின்வருமாறு:-

அமெரிக்கா – 40,131
ஸ்பெயின் – 20,453
இத்தாலி – 23,660
பிரான்ஸ் – 19,718
ஜெர்மனி – 4,548
இங்கிலாந்து – 16,060
துருக்கி – 2,017
சீனா – 4,632
ஈரான் – 5,118
பெல்ஜியம் – 5,683
பிரேசில் – 2,388
கனடா – 1,583
நெதர்லாந்து – 3,684
சுவிஸ்சர்லாந்து – 1,393
ஸ்வீடன் – 1,540

Share.
Leave A Reply

Exit mobile version