பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பங்களாதேஷின் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு எதிரான வழக்கு இன்று எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

விசாரணைக்குப் பிறகு, இன்று பங்களாதேஷின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT-BD) அவருக்கு எதிரான தீர்ப்பை வழங்க உள்ளது.

தீவிர பாதுகாப்பு

இந்நிலையில், பங்களாதேஷின் தலைநகரில் ஷேக் ஹசீனாவிற்கு ஆதரவாக போராட்டக்காரர்களால் ஏதேனும் பதற்றம் ஏற்பட்டால் உடன் சுட்டு வீழ்த்த உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, நேற்று இரவில் இருந்து பங்களாதேஷின் தலைநகரம் டாக்காவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக சிறப்பு தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்குவதற்கு முன்னதாக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Share.
Leave A Reply

Exit mobile version