தென்னிந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்கள் தளபதி விஜய் மற்றும் நடிகர் மகேஷ் பாபு. இவர்கள் இருவருடன் இணைந்து நடிப்பது என்பது தங்களுடைய கனவு என பல நடிகைகள் கூறியுள்ளனர்.
ஆனால், பிரபல முன்னணி நடிகை ஒருவர் இவர்கள் இருவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தும், அந்த படத்தை நிராகரித்துள்ளார்.
சாய் பல்லவி
அவர் வேறு யாருமில்லை, நடிகை சாய் பல்லவி தான். ஆம், ரசிகர்களின் மனம் கவர்ந்த தென்னிந்திய நாயகியாக வலம் வரும் சாய் பல்லவியை லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க கேட்டுள்ளனர். ஆனால், அவர் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.
அதே போல் மகேஷ் பாபு நடிப்பில் தெலுங்கில் வெளியான ‘சர்க்கார் வாரி பாட’ படத்தையும் நிராகரித்துவிட்டாராம். மேலும் துல்கர் சல்மானின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, கார்த்தியின் ‘காற்று வெளியிடை’, விஜய் தேவரகொண்டாவின் ‘டியர் காம்ரேட்’ ஆகிய படங்களையும் சாய் பல்லவி நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

