நாடாளுமன்றத் தேர்தலை ஜூன் 20ஆம் திகதி நடத்துவதற்குத் தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், தேர்தல் நடத்தப்படுவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களை நாளைய தினம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

நாளை முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவிருந்த இந்தக் கலந்துரையாடல் இரண்டு கட்டங்களாக நடைபெறுமெனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது பொதுத் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share.
Leave A Reply

Exit mobile version