கொரோனா வைரஸ் தாக்கத்தின் மிக மோசமான விளைவுகள் இனி மேல்தான் வரப்போகிறது என்று நேற்றைய தினம் (திங்கட்கிழமை) ஜெனீவாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் எதன் அடிப்படையில் அவர் இந்த கருத்தை தெரிவித்தார் என்பது தெரியவில்லை. ஆனால், ஆஃப்ரிக்கா முழுவதும் கொரோனா வைரஸ் ஏற்படுத்தப்போகும் எதிர்கால தாக்கம் குறித்து டெட்ரோஸ் ஏற்கனவே பலமுறை குறிப்பிட்டிருக்கிறார்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “எங்களை நம்புங்கள் இன்னும் மோசமான சூழல் வரவுள்ளது என்றும், இது ஒரு வைரஸ். ஆனால் பலருக்கு இதுபற்றிய போதிய புரிதல் இல்லை,” என்றும் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version