யாழ்ப்பாணம் காரைநகரில் மாடொன்றை திருடி இறைச்சியாக்கிய குற்றச்சாட்டில் பெண்கள் மூவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

காரைநகர் சிவகாமி அம்மன் கோயிலுக்குரிய காணிக்குள் உள்ள குடிமனையொன்றிலேயே திருட்டு மாடு வெட்டப்பட்டுள்ளது.

கடந்த 19ஆம் திகதி வீட்டுக் காணிக்குள் கட்டி வைக்கப்பட்டிருந்த 3 மாடுகளில் ஒன்று பகல் பொழுதில் திருடப்பட்டிருந்த நிலையில், மறுநாள் அதிகாலை, மாடு அறுக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

காரைநகர் சிவகாமி அம்மன் ஆலயத்திற்கு முன்பாக, ஆலய காணிக்குள் குடியிருக்கும் குடும்பமொன்றை இந்த பாதகத்தை செய்த நிலையில் தாயாரும், 20 வயதுகளிற்குட்பட்ட இரண்டு மகள்களுமே இவ்வாறு இறைச்சியுடன் கைது செய்யப்பட்டனர்.

கிராமசேவகரிற்கு தகவல் வழங்கப்பட்டு, அவர் மூலம் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டு, வீட்டுக்கு சென்றபோது, பெண்கள் மூவரும் இறைச்சியுடன் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

இறைச்சி விற்பனைக்காக சென்றிருந்த மூவரின் கணவர்மாரும் தலைமறைவாகியிருக்கும் நிலையில், இன்று அவர்களில் ஒருவர் கைதானார்.

இதேவேளை கைது செய்யப்பட்டுள்ள குடும்பத்தினர் தொடர்பில் ஏற்கனவே சில வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அண்மையில் கூட்டுறவு கடை ஒன்றை உடைத்து திருடிய வழக்கிலும் தொடர்புபட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version