பிரதேசத்திலுள்ள குன்று ஒன்றின் குகைக்குள்ளிருந்து திங்கட்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டவர் வேப்பவெட்டுவான், பண்டாரக்கட்டு வீதியை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான சுப்பிரமணியம் வேலாயுதம் (வயது 56) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் கட்டுத் துப்பாக்கி ஒன்றின் மூலம் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்துள்ளார் என்று பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவத்தை அறிந்து அவ்விடத்திற்கு சென்றிருந்த பொலிஸாரும் படையினரும் இணைந்து சடலத்தை மீட்டெடுத்து மேலதிக பிரேத பரிசோதனைக்காக சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக தாம் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் பிரேத பரிசோதனைகள் நிறைவுற்றதும் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.