கட்டுப்பணம் செலுத்துமாறுகோரி நிதி நிறுவன ஊழியர்கள் வீட்டுக்கு சென்றதால் கணவனுக்கு கொரோனா என பொய் சொன்ன பெண் சுகாதார பிரிவினர் மற்றும் பொலிஸாரினால் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் யாழ்.நல்லுார் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. மாதாந்த கட்டுப்பணத்திற்கு கொள்வனவு செய்யப்பட்ட பொருள் ஒன்றுக்கான கட்டுப்பணத்தை செலுத்துமாறுகோரி நிதி நிறுவன ஊழியர்கள் வீட்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில் பணம் இல்லாமையால் தனது கணவனுக்கு கொரோனா என வீட்டிலிருந்த பெண் பொய் கூறியுள்ளார். இதனையடுத்து அச்சமடைந்த நிதி நிறுவன ஊழியர்கள் உடனடியாக விடயத்தை சுகாதார பிரிவுக்கு கூறியுள்ளனர்.

இதனையடுத்து அதிரடியாக வீட்டை முற்றுகையிட்ட சுகாதார பிரிவினர் அங்கு பரிசோதித்தபோது குறித்த பெண் கட்டுப்பணம் செலுத்த பணம் இல்லாமையால் பொய் கூறியமை அம்பலமாகியிருக்கின்றது.

இதனையடுத்து சுகாதார பிரிவினராலும், பொலிஸாராலும் குறித்த பெண் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version