கொரோனாவிற்கு தீர்வு சொல்கிறேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அளித்த பேட்டி இணையம் முழுக்க பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவுக்கு டிரம்ப் சொன்ன பகீர் தீர்வு…
கொந்தளித்த மருத்துவர்கள் கோடை காலம் வந்தால் கொரோனா கொஞ்சம் கொஞ்சமாக வலிமை இழக்கும் என்று அமெரிக்கா அரசில் பணியாற்றும் விஞ்ஞானி வில்லியம் பிராயன் தெரிவித்துள்ளார்.
அதில் மே மாதம் வந்தால் கொரோனாவின் தாக்கம் குறையும். வெயில் மூலம் வரும் புற ஊதா கதிர்கள் கொரோனாவை கட்டுப்படுத்தும். நாங்கள் செய்த ஆராய்ச்சியின் அடிப்படையில் இந்த முடிவை அறிவிக்கிறோம்.
சூரிய ஒளிகள் கொரோனாவை பெரிய அளவில் கொல்கிறது. காற்று மற்றும் நிலப்பரப்பில் இருக்கும் கொரோனவை சூரிய ஒளி கொல்கிறது என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.
அதிர்வலை
அமெரிக்கா முழுக்க இந்த சோதனை முடிவுகள் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. பலரும் இந்த முடிவுகள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் வில்லியம் பிராயன் வெள்ளை மாளிகையில் இந்த பேட்டியை கொடுத்த அடுத்த நொடியே அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்கள் முன்னிலையில் பேசினார்.
அதில், சூரிய ஒளி மூலம் கொரோனா பலியாகும் என்பது பெரிய அளவில் நம்பிக்கை அளிக்கிறது. குணமடைய வாய்ப்பு உள்ளது குணமடைய வாய்ப்பு உள்ளது அதனால் நம்முடைய உடலில் அதிக அளவு ஒளியை செலுத்தினால் ஒருவேளை கொரோனா குணமடைய வாய்ப்பு உள்ளது.
மருந்தை செலுத்த வேண்டும் மருந்தை செலுத்த வேண்டும் நமது உடலுக்கு எப்படி மருந்தை செலுத்துகிறோமோ அதேபோல் செலுத்த வேண்டும். நீங்கள் இதை இன்னும் டெஸ்ட் செய்யவில்லை. இதை சோதனை செய்து பார்க்க வேண்டும்.
இந்த ஒளிகள் கொரோனாவை ஒரே நொடியில் கொன்றுவிடுகிறது என்று கேள்விப்பட்டேன். இதனால் உடலுக்குள் இப்படி ஒளியை செலுத்தி மொத்தமாக நமது உடலை சுத்தம் செய்ய வேண்டும்.
ஆர்வம் அளிக்கிறது
இந்த ஒளியை நமது உடலின் இதயத்திற்குள் செலுத்த வேண்டும். எனக்கு இந்த ஐடியா மிகவும் ஆர்வம் அளிக்கிறது என்று டிரம்ப் கூறினார். டிரம்ப்பின் இந்த திட்டத்தை பார்த்து அங்கிருந்த செய்தியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அதோடு அங்கிருந்த விஞ்ஞானி வில்லியம் பிராயன் டிரம்ப் சொன்னதற்கு எப்படி பதில் தருவது என்று குழம்பி போனார். இந்த வீடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.
பெரிய அளவில் கொந்தளிப்பு
அதேபோல் அமெரிக்காவை சேர்ந்த மருத்துவர்கள் இது தொடர்பாக விமர்சனங்களை வைக்க தொடங்கி உள்ளனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசுவது எந்த வகையிலும் சரியானது இல்லை என்று கூறியுள்ளனர்.