ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் மிகப்பெரிய மனித அழிவுகளை சந்தித்துவரும் இத்தாலி, நடைமுறையில் உள்ள சில கட்டுப்பாடுகளை தளர்த்தவுள்ளன.

பேரிழப்புகளால் முடங்கியுள்ள இத்தாலியை எளிதாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, எதிர்வரும் மே 4ஆம் திகதி தனது உற்பத்தித் துறையை மீண்டும் திறக்கப்படவுள்ளதாக பிரதமர் கியூசெப் கோன்டே தெரிவித்துள்ளார்.

இத்தாலிய நாளேடொன்று அளித்த செவ்வியில் அவர் கூறியுள்ளதாவது, ‘மே 4ஆம் திகதி உற்பத்தியில் இருந்து கட்டுமானம் வரை வணிகங்களில் ஒரு நல்ல பகுதியை மீண்டும் திறக்க அனுமதிக்க இந்த மணிநேரங்களில் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

அத்துடன், செப்டம்பர் மாதத்தில் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும். அதேபோல, நிறுவனங்கள் தங்கள் வாயில்களைத் திறப்பதற்கு முன்னர் கடுமையான சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்த வேண்டும்’என கூறினார்.

Share.
Leave A Reply

Exit mobile version