நாளையதினம் 27 ஆம் திகதி திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

விடுமுறையில் உள்ள படையினர் முகாம்களுக்குத் திரும்புவதற்கு இலகுவாக இருக்கும் வகையில் நாளையதினம் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கொழும்பு , களுத்துறை , கம்பஹா , புத்தளம் மாவட்டங்களை தவிர்ந்த இதர அனைத்து மாவட்டங்களிலும் 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம் அன்றிரவு 8 மணிக்கு மீண்டும் அமுலாகும்.

இதேவேளை, முன்னதாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டம் தவிர ஏனைய 21 நிர்வாக மாவட்டங்களிலும் வார இறுதி நாட்கள் முழுதும் அமுலில் இருந்த ஊரடங்கு நிலை நாளை 27 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5.00 மணி முதல் ஊரடங்கு தளர்த்தப்படுவதாகவும் பின்னர், ஊரடங்கு நிலைமையானது மே 1 ஆம் திகதிவரை, இரவு 8. 00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரை மட்டும் 9 மணி நேரம் ஒவ்வொரு நாளும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version