யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வீடொன்றில் கலாசார சீரழிவு இடம்பெற்று வருவதாக கிடைத்த தகவல்களை அடுத்து, நேற்றிரவு பொலிசாரால் சுற்றிவளைக்கப்பட்டது. இதன்போது அந்த வீட்டில் இருந்த வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் இருவரையும், ஆண் ஒருவரையும் பொலிசார் விசாரணைக்கு உட்படுத்திய பின்னர், அவர்களை அந்த வீட்டிலேயே தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – நாவலர் வீதியில் மனோகரா திரையரங்கிற்கு அண்மையாக உள்ள வீடொன்றில், அண்மைக்காலமாக கலாசார சீரழிவு இடம்பெற்று வருவதாக அயலவர்களால் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அந்த வீடு நேற்றிரவு சுற்றிவளைக்கப்பட்டது. அங்கிருந்த வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் இருவரையும் பொலிசார் விசாரணைக்கு உட்படுத்தினர். அத்துடன் அங்கு விடுதி நடத்தி வந்தவரிடமும், விசாரணை நடத்தப்பட்டது. அங்கிருந்தவர்கள் விசாரணைகளின் போது முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, அவர்களை குறித்த வீட்டிலேயே தனிமைப்படுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இன்று அவர்களை தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version