சுவிட்சர்லாந்து நாட்டில் பத்து வயதுக்கும் குறைவான சிறுவர்கள் தங்களது வயது முதிர்ந்த தாத்தா, பாட்டிகளை கட்டிப்பிடிக்க கூடாது என்று கூறப்பட்டிருந்த அறிவுறுத்தலை தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.

பத்து வயதுக்கும் குறைவான சிறுவர், சிறுமியர்கள் முதியவர்களுக்கு கொரோனா வைரஸை பரப்புவதில்லை என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் இடையேயான சந்திப்பு குறுகிய நேரம் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் வயது முதிர்ந்தவர்கள் குழந்தைகளை பராமரிக்கும் பணிகளில் ஈடுபட வேண்டாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வைரஸ் பரவல் காரணமாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக சுவிட்சர்லாந்து உள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version