1991 ஆம் ஆண்டின் பேர்ள் துறைமுகத் தாக்குதல் மற்றும 201 செப்டெம்பர் 11 ஆகிய தாக்குதல்களைவிட கொரோனா தொற்று நோய் மிக மோசமாக அமெரிக்காவை தாக்கியுள்ளது என ஜனாதிபதி ட்ரம்ப் புதன்கிழமை கூறியுள்ளார்.
சீனாவை குறிவைத்து பேசிய அவர், இந்தத் தொற்றை அந் நாடு ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தியிருக்க வேண்டும் என்றார்.
கொரோனாவால் அமெரிக்காவில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் முடக்க நிலையைத் தளர்த்தவும் தடுமாற்றம் கண்டுள்ள பொருளாதாரத்தை மீளப் புதுப்பிக்கவும் முயற்சித்துவரும் ட்ரம்ப், அண்மைக் காலமாக சீனாவுக்காக எதிரான சொற்கணைகளை அதிகரித்துள்ளார்.
சில ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகள் முடக்க நிலையை தளர்த்த ஆரம்பித்துள்ளன. ஆனால், பொருளாதார தாக்கத்துக்கு மத்தயில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும்வரை சமூக இடைவெளி தொடர்ந்து பேணப்படுவது அவசியம் என நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உலகம் முழுவதும் 37 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 2 இலட்சத்து 60,000க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இறப்புகளில் கால்வாசி அமெரிக்காவில் பதிவாகியுள்ளது.
சீன நகரான வுஹானில் கடந்த வருடம் ஆரம்பித்த இந்த தொற்று ‘ஒருபோதும் இடம்பெற்றிருக்கக்கூடாது’ எனக் குறிப்பிட்ட அவர், ‘இந்த மூலத்தை ஆரம்பத்திலேயே தடுத்திருக்கலாம். சீனாவிலேயே நிறுத்தியிருக்கலாம்’ எனவும் கூறினார்.
‘இது உண்மையில் நாங்கள் எதிர்கொண்ட மிக மோசமான தாக்குதல். இது பேர்ள் துறைமுகத் தாக்குதலைவிட மோசமானது. உலக பொருளாதார நிலையத் தாக்குதலைவிட மோசமானது’ என செய்தியாளர்களிடம் ட்ரம்ப் தெரிவித்தார்.
ஹவாய் தீவில் உள்ள பேர்ள் துறைமுக கடற்படைத் தளம் மீது 1941 டிசெம்பர் 7 ஆம் திகதி ஜப்பான் நடத்திய திடீர் தாக்குதல்தான் அமெரிக்காவை இரண்டாவது உலகப் போரில் தலையிட வைத்தது.
உலக பொருதார நிலையம் மீது 2001 செப்டெம்பர் 11ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குல்களில் ஏறத்தாழ 3,000 பேர் பலியானதுடன் இரண்டு தசாப்தகால போரையும் தூண்டிவிட்டது.
கொவிட் – 19 நோய்த் தாக்கத்தால் 73,000க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் இறந்துள்ளனர்.
இம் மாத இறுதிக்குள் அமெரிக்காவில் இறப்புகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைத் தொடும் என நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையங்களுக்கான முன்னாள் பணிப்பாளர் டொம் ப்ரைடென் கணிப்பிட்டுள்ளார்.
‘சக்திவாய்ந்த தடுப்பூசி எமக்கு கிடைக்கும்வரை, முற்றிலும் எதிர்பாராத ஒன்று நிகழ்ந்தாலன்றி, இந்த எதிரியான தொற்று பல மாதங்களுக்கு அல்லது பல வருடங்களுக்கு எம்முடனேயே இருக்கும்’ என காங்கிரஸ் கூட்டத்தின்போது ப்ரைடென் கூறினார்.
இந்தத் தோற்று நோயானது, நியூ யோர்க் உட்பட ஐக்கிய அமெரிக்காவின் பல பகுதிகளில் சுகாதார உட்கட்டமைப்பு பெரிதும் பாதிக்கச்செய்துள்ளது. அதன் தாக்கம் குறிப்பாக ஆவணப்படுத்தப்படாத புலம்பெயர்ந்தோர் போன்ற சலுகைகள் குறைவாக உள்ள அமெரிக்க சமூகத்தினர் மீது கடுமையாக உள்ளது.
அவர்களில் பெரும்பாலானவர்கள் நாடு கடுத்தப்படலாம் என அஞ்சுகின்றனர்.
அது மட்டுமல்லாமல் மருத்துவக் கட்டணங்களை செலுத்த முடியாமல் அது உயரும் ஆபத்தையும் எதிர்கொள்கின்றனர்.
மேலும் சட்டபூர்வ அந்தஸ்தைப் பெறுவதற்கான அவர்களது முயற்சிகளும் பாதிக்கப்படலாம்.
இதன் விளைவாக பலர் கொவிட் – 19 தொற்றுக்குள்ளாகி இறந்துள்ளனர்.