பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நல்லுருவ பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வலான ஊழல் தடுப்பு பிரிவின் சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய ஓய்வுப் பெற்ற வைத்தியரும் 38 வயதுடைய பெண்ணுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் பாணந்துறை – மபெல்லன பகுதியில் வீடு ஒன்றில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், இந்த வீட்டை சோதனைக்கு உட்படுத்தியபோது குறித்த வீட்டின் அலுமாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கருக்கலைப்பு மருந்துகள் , இரு கை துப்பாக்கிகள் , 9 மில்லி மீட்டர் துப்பாக்கி தோட்டாக்கள் 21 என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல் கிடைத்ததையடுத்து மிகவும் சூட்சுமுகமான முறையில் திட்டமொன்றை தீட்டியே அவர்களைக் கைது செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. அதற்கமைய பெண் ஒருவர் ஊடாக குறித்த சந்தேக நபரான பெண்ணை தொடர்பு கொண்டு அந்த பெண்ணின் ஊடாகவே ஓய்வு பெற்ற வைத்தியரிடம் தொடர்பு கொண்டுள்ளனர்.

இதன் போது குறித்த பெண் தனக்கு கருகலைப்பு செய்வேண்டியுள்ளதாக குறித்த வைத்தியரிடம் தெரிவித்துள்ளார். அவர் அதற்காக 70 ஆயிரம் ரூபாவை தனக்கு வழங்க வேண்டும். என்றும் அதன் பின்னர் கருகலைப்புச்  செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய குறித்த வைத்தியசாலைக்கு அந்த பெண் சென்றுள்ளதுடன், சந்தேக நபரான வைத்தியர் அந்த பெண்ணுக்கான ஸ்கேன் பரிசோதனைகளை செய்யும் போதே பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களான வைத்தியர் உள்ளிட்ட பெண் இருவரும் பாணந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதுடன் பாணந்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version