இந்தோனேஷியாவில் இறுதிச்சடங்கின்போது சவப்பெட்டிக்குள் இருந்த சடலம் திடீரென கையசைக்கும் வீடியோ ஒன்று வெளியாகி திகிலைக் கிளப்பியுள்ளது!
இந்தோனேஷியாவின் Manado நகரில் இறந்த ஒருவரை புதைப்பதற்காக அவரது உறவினர்களும் நண்பர்களும் கூடியிருக்கின்றனர்.
பாதிரியார் இறுதி உரை ஆற்றிக்கொண்டிருக்க, திடீரென அந்த சவப்பெட்டிக்குள் ஏதோ அசைவு தெரிவதைக் கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வெளியாகியுள்ள வீடியோவில், அந்த சவப்பெட்டிக்குள்ளிருப்பவரின் கை அசைவதைக் காண முடிகிறது.
இதற்கிடையில், ஒரு பக்கம் இறந்தவர்களின் உடல் திடீரென அசைவது இயற்கைதான் என அறிவியலாளர்கள் கூறியுள்ளனர்.
ஆனால், குறிப்பிட்ட அந்த சம்பவத்தின்போது, அந்த பெட்டிக்குள் என்ன நடந்தது, அவர் உயிரோடிருந்தாரா, சுற்றியிருந்தவர்கள் பெட்டியைத் திறந்து பார்த்தார்களா என்பது குறித்த தகவல்கள் தெரியவரவில்லை.