ஊரடங்கால் வீட்டில் இருக்கும் பிரபல நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தின் மூலம் அறிமுகமானவர் ரித்திகா சிங். இயல்பிலேயே கிக் பாக்சிங் விளையாட்டு வீராங்கனையான ரித்திகா, அந்த படத்தில் அதே வேடம் என்பதால் கனகச்சிதமாக பொருந்தினார்.
இறுதிச்சுற்று படத்தில் நடித்ததற்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே திரைப்படம், பிளாக்பஸ்டர் ஹிட்டானது.
தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார். அடுத்ததாக தமிழில், அருண் விஜய்யின் பாக்சர், அரவிந்த் சாமியின் வணங்காமுடி போன்ற படங்களில் அவர் நடிக்கிறார்.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருக்கும் ரித்திகா சிங், இன்ஸ்டாகிராமில் பாடிக்கொண்டே துணி துவைக்கும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் என் அம்மா என்ன எதிர்பார்த்தார், ஆனால் நான் என்ன செய்துள்ளேன் என நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.