வங்கதேசத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமில் வாழ்ந்து வரும் இரண்டு ரோஹிஞ்சா அகதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கிட்டதட்ட ஒரு மில்லியன் ரோஹிஞ்சா அகதிகள் வாழ்ந்துவரும் காக்ஸ் பஜார் முகாமில் தற்போது முதல் முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், மேலும் 1900 பேர் பரிசோதனைக்காகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த முகாமில் ரோஹிஞ்சா அகதிகள் நெருக்கடியான சூழ்நிலையிலும், சுத்தமான குடிநீரும் கிடைக்காமல் வாழ்ந்து வரும் நிலையில், இங்கு வைரஸ் பாதிப்பு ஏற்படலாம் உதவி அமைப்புகள் முன்பே எச்சரித்து இருந்தன.

“உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமான காக்ஸ் பஜாருக்கு கொரோனா வைரஸ் வந்துவிட்டது. இந்த நிலை நீடித்தால் வைரஸ் தொற்று காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் இறப்பார்கள்” என வங்கதேசத்தின் சேவ் தி சில்ட்ரன் அமைப்பின் சுகாதார இயக்குனர் ஷமிம் ஜஹான் கூறியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version