ஈழம் என்ற குறிப்புடன் கூடிய இலண்டன் கார்டியன் பத்திரிகையின் சுற்றுலா வினா விடைப் போட்டியை திரும்பப் பெறுமாறு இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

த கார்டியன் செய்திப் பத்திரிகையின் இணையத்தளப் பதிப்பில் வெளியிடப்பட்ட சுற்றுலா வினா விடைப் போட்டியில் ஈழம் என்பது எந்தப் பிரபலமான தீவின் பூர்வீகப் பெயர்? என வினவப்பட்டுள்ளது.

இந்த வினாவிற்கான பதில் தெரிவுகளில் ஒன்றாக இலங்கை பட்டியலிடப்பட்டுள்ளதுடன், ஒருவர் இலங்கையை பதிலாகத் தேர்ந்தெடுத்து, அதை சரியான பதிலாகக் குறிப்பிடுகையில், இந்தத் தீவின் அண்மைய இராணுவக் கிளர்ச்சியின் முழுப் பெயர் எல்.ரீ.ரீ.ஈ. – தமிழீழ விடுதலைப் புலிகள் எனவும் மேலதிக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தகவலின் தவறான தன்மை காரணமாக, அதனை நீக்குமாறு கோரிக்கை விடுத்து ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கையின் உயர் ஸ்தானிகர் த கார்டியன் செய்திப் பத்திரிகையின் ஆசிரியருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version