ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மருத்துவர் ஒருவரை போலீசார் சிலர் கைகளை கட்டி தாக்கிய வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து விசாகப்பட்டினம் போலீஸ் கமிஷனர் ஆர்.கே. மீனா கூறுகையில், ‘மருத்துவர் சுதாகர் மது போதையில் இருந்த நிலையில் அங்கிருந்த போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அதே போல கான்ஸ்டபிள் ஒருவரின் செல்போனை பிடுங்கி வீசியுள்ளார். அவர் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அதனால் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். சிகிச்சை முடிந்த பின் அவர் மீது வழக்குப்பதிவு செய்வோம். அதே போல, சுதாகரை தாக்கிய கான்ஸ்டபிள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளோம்’ என தெரிவித்தார்.

 

Share.
Leave A Reply

Exit mobile version