கொரோனா வைரஸ் தொற்றால் உலக அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 லட்சத்தை கடந்துள்ளதாக அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் தெரிவிக்கின்றன.
அதேவேளையில், உலகெங்கும் 3 லட்சத்து 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் உலக அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 லட்சத்தை கடந்துள்ளதாக அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் தெரிவிக்கின்றன.
உலகெங்கும் 3 லட்சத்து 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா பத்தாவது இடத்தை பிடித்துள்ளது.
கடந்த மார்ச் 25-ஆம் தேதிக்கு பிறகு, இந்தியாவில் மீண்டும் உள்நாட்டு விமானசேவை தொடங்கியது.
உலக அளவில் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இரண்டாவது இடத்தில் உள்ள பிரேசிலில் இருந்து வரும் வருபவர்களுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரசித்திபெற்ற ஸ்பானிஷ் பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகளை ஜூன் மாதம் தொடங்கவுள்ளதாக ஸ்பெயின் தெரிவித்துள்ளது.
அண்மைய நிலவரம்
கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 6977 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முதல்முறையாக ஒரே நாளில் இத்தனை பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மேலும் தற்போது 77103 ஆக்டிவ் நோயாளிகள் இருப்பதாகவும் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுவரை 4021 கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்றும் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்குகிறது
அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால் 638பேர் உயிரிழந்துள்ளனர். ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தகவல்படி கொரோனா தொற்றால் இதுவரை அமெரிக்காவில் 98,000 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொரோனா தொற்றால் அமெரிக்காவில் ஒரு லட்சம்பேர் உயிரிழக்கலாம் என தெரிவித்திருந்தார்.
தொடங்கப்பட்ட விமான சேவை
இந்தியாவில் சுமார் இரண்டு மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து இன்று மீண்டும் தொடங்கியது.
தமிழகத்தில் நாளொன்றுக்கு 25 விமானங்கள் வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பயணிகள் தமிழக அரசு இணையதளத்தில் தங்கள் விவரங்களை பதிந்து இ – பாஸ் பெற வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.