இலங்கையில் ஒரே நாளில் அதிகளவிலான கொரோனா தொற்றாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டனர்.

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை 1,200ஐ தாண்டியுள்ளது.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் இதுவரையான தரவுகளின் அடிப்படையில், இன்று மாலை வரை 1278 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் ஒரே நாளில் அதிகளவிலான கொரோனா நோயாளிகள் இன்றைய தினமே பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

இன்று ஒரே நாளில் 96 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களில் அதிகளவிலானோர் குவைத் நாட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட இலங்கையர்கள் என சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

இதன்படி, குவைத் நாட்டிலிருந்து வருகைத் தந்த 88 பேரும், கடற்படையைச் சேர்ந்த 8 பேரும் இன்று அடையாளம் காணப்பட்டவர்களுள் அடங்குவதாக சுகாதார அமைச்சு குறிப்பிடுகின்றது.

Share.
Leave A Reply

Exit mobile version